பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வனஜீவராசிகளுக்குச் சொந்தமான காணியை விகாரை அமைக்க கோரி மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தி வருகின்றார்.
போராட்டத்தின்போது அவர் பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வதோடு அவர்களது பணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியமையால் பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குவை தடுக்காமல் பொலிஸார் வேடிக்கை பார்க்கின்றனர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews

