அமெரிக்காவில் பதிவாகியுள்ள முதல் ஒமைக்ரோன் மரணம்!!

samayam tamil 1 1

அமெரிக்காவில் பரவி வந்த ஒமைக்ரான் தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர்  டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு 0.4 சதவீதம் இருந்தநிலையில் இது அடுத்த 10 நாட்களில் 2.9 சதவீதமாக, ஏறக்குறைய 6 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தான் அமெரிக்காவின் டெக்சாஸ்  மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு 50 முதல் 60 வயதுக்குள் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

#World

 

Exit mobile version