அமெரிக்காவில் ஒமைக்ரோன் வேகமாக பரவுவதால் அதனை தடுப்பதற்கு அமெரிக்கா மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி மக்களுக்கு தெரிவிக்கையில்,
டிசம்பர் 1 ஆம் தேதி கணக்கின்படி அன்றாட சராசரி தொற்று 86,000 ஆக இருந்தது. அதுவே டிசம்பர் 14 ஆம் தேதியின் படி 1 லட்சத்து 17 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரோனில் இருந்து ஒரே பாதுகாப்பு தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே. அமெரிக்கா கொரோனா பேராபத்தின் கடைசி அத்தியாயத்தை பதற்றத்துடன் எதிர்கொண்டுள்ளது.
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முதல் டோஸை போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment