MediaFile 3 3
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் AI கட்டமைப்பிற்கு அமேசன், மைக்ரோசொப்ட் கூட்டாக 52.5 பில்லியன் டொலர் முதலீடு!

Share

தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவான்களான அமேசன் (Amazon) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில் இந்தியாவில் கூட்டாக 52.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 4.35 இலட்சம் கோடி) முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளன.

அமேசன் நிறுவனம் 2030-க்குள் இந்தியாவில் 35 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த முதலீடு AI சார்ந்த டிஜிட்டல் மயமாக்கல், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்படும்.

அறிவிக்கப்பட்டுள்ள 35 பில்லியன் டொலர் முதலீடு, ஏற்கனவே இந்தியாவில் செய்யப்பட்ட 40 பில்லியன் டாலர் முதலீட்டின் தொடர்ச்சியாக அமையும். இதன் மூலம் இந்தியாவில் “மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக” தங்கள் நிறுவனம் உருவெடுக்கும் என்று அமேசன் தெரிவித்துள்ளது. முதலீட்டின் பெரும் பகுதி உள்ளூர் கிளவுட் (Cloud) மற்றும் AI உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்படும்.

மைக்ரோசொப்ட் நிறுவனம் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பை வலுப்படுத்த 17.5 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

இந்த முதலீடு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட 3 பில்லியன் டொலர் முதலீட்டைத் தொடர்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் AI மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பு மையமாகத் திகழும் இந்தியா, சமீப காலமாக உலகளாவிய தொழில்நுட்ப முதலீடுகளில் பெரும் அதிகரிப்பைக் கண்டு வருகிறது:

கடந்த அக்டோபரில், கூகுள் நிறுவனம் AI தரவு மையத்தை அமைக்க 15 பில்லியன் டொலர் முதலீட்டை அறிவித்தது.

இந்த வாரத் தொடக்கத்தில், மும்பையைச் சேர்ந்த டாடா எலெக்ட்ரானிக்ஸின் 14 பில்லியன் டொலர் செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டத்தில் தனது முதல் முக்கிய வாடிக்கையாளராக இணைவதாக இன்டெல் அறிவித்தது

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...