1822704 hajj
செய்திகள்இலங்கை

அடுத்த வருட ஹஜ் யாத்திரை: பயண வாய்ப்பு உறுதிப்படுத்த அமானா வங்கியில் ரூ. 7.5 இலட்சம் வைப்பு அவசியம் – ஹஜ் குழு தலைவர்!

Share

அடுத்த வருடம் புனித ஹஜ் கடமைக்குச் செல்லப் பதிவு செய்துள்ளவர்கள் தங்களின் கடவுச்சீட்டுக்களை (Passport) தரகர்களிடம் கொடுக்காமல், தாங்கள் விரும்பிய ஹஜ் முகவர்களிடம் நேரடியாகக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமானா வங்கியில் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா (750,000) வைப்பில் வைத்திருப்பவர்களுக்கு ஹஜ் பயணத்துக்கான வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமய மற்றும் கலாசாரத் திணைக்களத்தில் நடைபெற்ற அடுத்த வருடத்துக்கான புனித ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அடுத்த வருட ஹஜ் கடமைக்காக இலங்கையருக்கு 3,500 கோட்டா கிடைத்துள்ளது. இது அதிகரிக்கப்பட மாட்டாது. இந்தக் கோட்டாவில் உள்ள 3,500 பேரையும் கடந்த வருடம் போல மினாவில் ஒரே இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இலங்கையருக்கு வலயம் 2 பீ (Zone 2 B) தரத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். இம்முறை விஐபி பக்கேஜ்கள் கிடையாது. யாரும் அதற்காக அதிக பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Share
தொடர்புடையது
crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...

24 6694ccce98702
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபம் தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற கோர விபத்து: நால்வர் நீரில் மூழ்கி பலி!

சிலாபம் – தெதுறு ஓயா ஆற்றில் இன்று (நவ 06) நீராடச் சென்ற ஒரு சுற்றுலா...