மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19) முதல் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு இடையே இன்று (18) அதிகாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாளை (டிசம்பர் 19) முதல் பாடசாலைகள் மூடப்படும். அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதியும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபனி பியசேன இது குறித்துத் தெரிவிக்கையில், “கிறிஸ்துமஸ் விடுமுறையைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த அவசர விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.