25 691e89e4b3b38
செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களின் புகைப்பழக்கம்: வைத்தியர் துமிந்த யசரத்னவின் அதிர்ச்சித் தகவல்!

Share

பாடசாலை மாணவர்களிடையே சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது குறித்து பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன கருத்துத் தெரிவிக்கையில், குறிப்பாக 14 அல்லது 15 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பலர் சிகரெட்டுகளைப் பரிசோதித்துப் பார்க்க முனைகின்றனர். இளம் வயதிலேயே புகைப்பழக்கத்திற்கு ஆளாகும் இந்த நிலை கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இளம் வயதில் இந்தப் பழக்கத்திற்கு ஆளாவதால் ஏற்படும் முக்கிய சுகாதார அபாயம் குறித்தும் அவர் எச்சரித்தார்.
இந்தப் பழக்கம் எதிர்காலத்தில் பல்வேறு சுவாசக் கோளாறுகள் மற்றும் கடுமையான நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...