ஒமிக்ரோன் பரவல் காரணமாக நேற்றையதினம் 3,460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகளவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்களே உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு இடங்களில் ஒமிக்ரோன் தொற்றால் விமான சேவைகள் அண்மைக் காலமாக ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்மஸ் பண்டிகை பயணங்களுக்காக சுற்றுலாப் பயணிகள் நம்பியிருந்த விமானங்கள் 1,259 ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான சேவைகளில் பலர் தனிமைப்படுத்தலில் இருப்பதாலும், பலர் வேலைக்கு சமூகமளிக்காததாலும் விமானசேவைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#WorldNews