ஸ்பெயினில் எரிமலை துகள்களால் விமான போக்குவரத்து பாதிப்பு

j

Spain

ஸ்பெயின் லாபால்மா விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் எரிமலை துகள்கள் காற்றில் கலந்து அதிகளவில் காணப்படுவதால் விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ ஒரு மாத காலமாக கூம்பரே பியகா எரிமலை வெடித்து தீப்பிழம்பைக் கக்கி வருகிறது.

எரிமலைக் கழிவின் துகள்கள் காற்றில் கலந்து நகர பகுதிகள் புகை சூழ்ந்து காட்சியளிக்கின்றன.

எரிமலை சீற்றத்தை காண கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ள நிலையில், திடீர் புகைமண்டலத்தால் பல்வேறு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

எரிமலை சீற்றத்தைக் காண வந்த பயணிகள், விமானம் இன்றி ஏமாற்றமடைந்துள்ளனர்.

Exit mobile version