a11
செய்திகள்இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் சரிவு: யாழ்ப்பாணம், புத்தளம் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

Share

இலங்கையின் பல நகர்ப்புறங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தரம் ‘சற்று ஆரோக்கியமற்ற’ (Slightly Unhealthy) நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

முக்கியமாக யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரச் சுட்டெண் (AQI) முறையே 92 மற்றும் 100 ஆகப் பதிவாகியுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான முன்னறிவிப்பின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் 48 முதல் 112 வரை நிலவக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம் (100–108) மற்றும் புத்தளம் (104–112) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ‘சற்று ஆரோக்கியமற்ற’ (Slightly Unhealthy) மட்டத்தில் இருக்கும்.

அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் காற்றின் தரச் சுட்டெண் மிகக் குறைந்த அளவாக 46ஆக பதிவாகியுள்ளது.

மேலும் காலை 8:00 முதல் 10:00 வரையும், மாலை 3:00 முதல் 5:00 வரையும் காற்றின் மாசு அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் தரச் சுட்டெண் (AQI) முக்கியமாக PM2.5 எனப்படும் நுண் துகள்களின் அளவை வைத்தே கணக்கிடப்படுகிறது.

இவை சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் ஊடுருவிச் சென்று பல்வேறு சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. காற்றின் தரம் குறைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மாசு அதிகம் உள்ள நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும், தேவையேற்படின் முகக்கவசம் அணியுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...