AI-ஆல் மனித மனதை வெல்ல முடியாது: செயற்கை நுண்ணறிவு குறித்து ரணில் விக்ரமசிங்கவின் சுவாரஸ்யமான ஒப்பீடு!

Ranil Wickremesinghe 5

Screenshot

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் எவ்வளவுதான் அசுர வளர்ச்சி அடைந்தாலும், மனித நனவு நிலையை (Human Consciousness) அதனால் ஒருபோதும் விஞ்ச முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது, அங்கிருந்த வரவேற்புப் பாடல் AI மூலம் உருவாக்கப்பட்டதை அறிந்த ரணில் விக்ரமசிங்க, தொழில்நுட்பம் மற்றும் மதம் குறித்த தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார்.

தமது உரையின் போது, சமீபத்தில் தான் ChatGPT உடன் நடத்திய உரையாடல் ஒன்றை அவர் சுட்டிக்காட்டினார்.

“பௌத்த தர்மத்தின் ‘தம்மபத’ ஸ்லோகங்களின் அடிப்படையில், மனித மனமா அல்லது செயற்கை நுண்ணறிவா, இதில் எது உயர்ந்தது?” என அவர் வினவியுள்ளார்.

அதற்கு அந்தத் தொழில்நுட்பமே “மனித மனமே மேலானது” என்பதை ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். AI என்பது வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டது, ஆனால் மனித மனம் எல்லையற்றது என்பதே இதற்குக் காரணம் என அவர் விளக்கினார்.

அமெரிக்கா (300 பில்லியன் டொலர்) மற்றும் சீனா போன்ற நாடுகள் AI துறையில் மேற்கொள்ளும் பாரிய முதலீடுகள் குறித்து ஆச்சரியம் வெளியிட்ட அவர், வருங்காலத்தில் ‘செல்வத்தை’ விட ‘அறிவே’ தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றார்.

தொழில்நுட்ப வளர்ச்சி மதத்தைத் தேவையற்றதாக்கும் என்ற வாதத்தை நிராகரித்த அவர், மதம் என்பது மனித வாழ்வின் பிரிக்க முடியாத அம்சம் என்றார்.

பௌத்த தத்துவங்களையும் நவீன தொழில்நுட்பத்தையும் எவ்வாறு ஆக்கப்பூர்வமாக ஒன்றிணைப்பது என்பது குறித்து மதத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

 

Exit mobile version