டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

MediaFile 1 7

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள் தமது கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தை நீடிக்க விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை தீர்மானித்துள்ளது.

அனர்த்தம் காரணமாக தபால் நிலையங்களுக்குச் செல்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு, இந்த மாதத்திற்குரிய விவசாய ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதற்கான காலத்தை ஜனவரி 31 ஆம் திகதி வரை நீடிக்க அந்தச் சபை தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, டிசம்பர் மாதத்திற்கான ஓய்வூதியத்தை ஜனவரி 31 ஆம் திகதி வரை வேலை நாட்களில் அந்தந்த தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது விவசாய ஓய்வூதியப் பயன்களைப் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை 178,753 என்பதுடன், மீனவ ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 6,312 என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Exit mobile version