சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

1732463885 students in flood 6

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியின் கூற்றுப்படி, இந்தப் பாதிப்படைந்த மாவட்டங்களில் 7,395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர, 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இதுவரை கிடைத்த மழைவீழ்ச்சியினால், நில்வளா கங்கை, கிங் கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளின் நீர் மட்டங்கள் உயர் மட்டத்தில் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Exit mobile version