உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

25 68fb9443b29cd

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 2362 பரீட்சை மையங்களில் பரீட்சை நடைபெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவேளை, பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சை டிசம்பர் 6, 2025 சனிக்கிழமை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பரீட்சை நாடளாவிய ரீதியாக 1665 நிலையங்களில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version