அதிமுகவில் இணைந்தார் நடிகை கௌதமி.., பாஜகவில் இருந்து விலகிய நிலையில் திடீர் முடிவு
பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
பாஜகவில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றியதற்கு, அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், கட்சியில் இருப்பவர்கள் தனக்கு ஆதரவாக இல்லை என்றும் கௌதமி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், கடந்த ஓக்டோபர் மாதம் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அண்மையில், பாஜகவில் இருந்து விலகியிருந்த நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.