சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: நடிகர் ஜெயராம் சாட்சியாக வாய்ப்பு – விசாரணைக் குழு திட்டம்!

MediaFile 16

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலுக்குச் சொந்தமான ஆபரணங்களிலிருந்து தங்கம் திருடப்பட்ட சம்பவம் (Sabrimala Gold Theft) நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் நடிகர் ஜெயராம் சாட்சியாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தங்கக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கில் நடிகர் ஜெயராம் சாட்சியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஜெயராமிடம் வாக்குமூலம் பெறுவதற்குச் சிறப்புப் புலனாய்வுக் குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிலின் நகைகள் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த விவரங்கள் தொடர்பில் ஜெயராமிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version