MediaFile 2 1
செய்திகள்இலங்கை

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மனிதாபிமான உதவி: கைதிகள் தங்களின் மதிய உணவை வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கினர்!

Share

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெருந்தொகையான கைதிகள், இன்றைய நாளுக்கான தங்களின் மதிய உணவை, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்த 3,874 கைதிகள், சிறைச்சாலை நிர்வாகத்திடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 750 கிலோ அரிசி, 50 தேங்காய்ப் பால் மாப் பொதிகள், 100 கிலோ கொண்டைக்கடலை, 100 கிலோ, கௌபி, 10 கிலோ பயறு, 60 கிலோ சோயாமீட், 100 கிலோ சீனி, 10 கிலோ, தேயிலை, 10 கிலோ மிளகாய் தூள், 30 கிலோ உப்பு மற்றும் 100 கிலோ பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களை கைதிகள் அன்பளிப்பு செய்தனர்.

இந்த உலர் உணவுப் பொருட்கள் வெலிக்கடைச் சிறைச்சாலையின் சிரேஷ்ட அத்தியட்சகர் ரஜீவ் எஸ். சில்வா தலைமையிலான சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளால், இன்று கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை வளாகத்தில் வைத்து கொழும்பு மாநகர சபையின் பிரதி மாநகர முதல்வர் ஹேமந்த குமாரவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...