கல்வியாளர்கள் மேற்கொண்ட செயல் மிகவும் முன்னுதாரணமானது என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெற்றுக் கொண்ட கல்வியாளர்கள் மேற்கொண்ட செயல் புத்திஜீவிகளின் துணிச்சலையும் சுயமரியாதையையும் வெளிப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கம் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
தங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பதவிகளை நியமிக்க கூடாது. இச்செயலில் இருந்து அனைத்து மதத் தலைவர்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கல்வி கற்ற சமூகம் நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதால் இது அரசாங்கத்துக்கு மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment