23 6518160b0495b
உலகம்செய்திகள்

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை

Share

மேலிடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரபரப்பான அறிக்கை

அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக மேலிடத்திற்கு அறிக்கை சமர்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாகவும் அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த கூட்டணி முறிவுக்கு, அதிமுக தலைவர்களை பற்றி அண்ணாமலை தவறாக பேசியது தான் காரணம் என பரவலாக கூறப்படுகிறது.

இதனிடையே, அதிமுகவில் மீண்டும் பாஜகவை இணைப்பதற்கான வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்தில் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த அறிக்கையானது, அதிமுகவுடன் பாஜக இணைந்திருந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும், பிரிந்து சென்றால் பாஜகவால் வெற்றி பெற முடியுமா என்றும், மாவட்ட பாஜக தலைவர்களிடம் பெற்ற தகவல்களை வைத்து தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...