al
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை: நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை !

Share

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாளை (06) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை பின்வரும் செயற்பாடுகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. பரீட்சார்த்திகளுக்காக நடத்தப்படும் தனியார் மேலதிக வகுப்புகள் (Tuition Classes).

பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள். மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல். பரீட்சை வினாக்களை ஒத்த வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள் அல்லது துண்டுப் பிரசுரங்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக வெளியிடுதல்.

எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவுகளை மீறிச் செயற்பட்டால், அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையில் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை.

நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...