இலங்கையின் முக்கிய சிறைச்சாலைகளில் தற்போதைக்கு சுமார் 826 மரண தண்டனைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மனிதப் படுகொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வழக்குகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களே இவர்கள் ஆவர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகளில், 805 பேர் ஆண் கைதிகள் ஆகவும், 21 பேர் பெண் கைதிகள் ஆகவும் உள்ளனர்.
இந்த மரண தண்டனைக் கைதிகளில் 393 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளனர்.
குறித்த கைதிகளின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக நாளொன்றுக்குச் சுமார் 1,400 ரூபா வரையில் செலவிடப்படுவதாகச் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.