எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து 81 வயதுடைய முதியவர் ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முதியவர் இன்று வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர் சிகிச்சை பெறுவதற்கான பற்றுச்சீட்டை (OPD Ticket) பெற்றுக்கொண்ட போதிலும், சிகிச்சை முடிந்து வீட்டிற்குச் செல்லாமல் வைத்தியசாலையின் மூன்றாவது மாடிக்குச் சென்றுள்ளார்.
மூன்றாவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில், உயிரிழந்தவர் கரந்தெனிய, கிரிபெட்டே பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த முதியவர் தவறுதலாகக் கீழே விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தாரா என்பது குறித்து எல்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

