images 9
செய்திகள்இலங்கை

பெப்ரவரிக்குள் அனைவருக்கும் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை!

Share

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக 8 இலட்சம் புதிய அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் நீண்டகாலமாக நிலவி வந்த அட்டைத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுவரை 240,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு, அவற்றை விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அட்டை தட்டுப்பாடு காரணமாகச் சுமார் 4.5 இலட்சம் பேருக்கு இதுவரை தற்காலிக அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டிருந்தன. எஞ்சியுள்ள 210,000 அட்டைகளையும் எதிர்வரும் பெப்ரவரி 28-ஆம் திகதிக்குள் அச்சிட்டு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பொதுவாக மாதத்திற்கு 60,000 முதல் 80,000 வரை புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுகிறது. தற்போது போதியளவு அட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டு கையிருப்பில் உள்ளதால், இனிவரும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படாது என ஆணையாளர் நாயகம் உறுதியளித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம், தற்காலிக அனுமதிப்பத்திரங்களை வைத்துக்கொண்டு சிரமங்களை எதிர்கொண்ட இலட்சக்கணக்கான வாகனச் சாரதிகள் விரைவில் தமது நிரந்தர அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...