Presidential Pardon for 197 Inametes In View of 74th Independence Day 1
செய்திகள்அரசியல்இலங்கை

78-வது சுதந்திர தினம்: 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு!

Share

இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் விசேட அதிகாரத்தின்கீழ் 49 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 34-வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைச்சாலையில் நன்னடத்தையுடன் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு இந்த மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளது.

75,000 ரூபாவிற்கும் குறைவான அபராதத் தொகையைச் செலுத்தத் தவறியமைக்காகச் சிறைத் தண்டனை அனுபவிப்பவர்களின் எஞ்சிய தண்டனை காலம் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

இந்த விசேட பொது மன்னிப்பின் மூலம் விடுதலை பெறவுள்ள கைதிகள், சுதந்திர தினமான பெப்ரவரி 4-ஆம் திகதி அந்தந்தச் சிறைச்சாலைகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...