யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த கனகரட்ணம் துரைராஜசிங்கம் (67 வயது) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டிலிருந்து அத்தியாவசியத் தேவை நிமித்தம் வெளியில் சென்ற இவர், ஆறுகால்மடம் மடத்தடிப் பகுதியில் வீதியோரமாகச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் பயணித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி வீழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சடலம் மீட்கப்பட்டு மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

