66 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு!

66 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை ஒன்று தென் சீனாவின் கான்சு நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த முட்டை கோழிக்குஞ்சு போன்று முட்டையில் இருந்து வெளிவருவதற்கு தயாரான நிலையில் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

FHMzQODakAIf0A

‘பேபி யிங்லியாங்’ என்று பெயரிடப்பட்டுள்ள இவ் டைனோசர் முட்டை பல்லில்லாத தொரோபாட் டைனோசர் அல்லது ஓவிராப்டோரோசர் டைனோசரின் உடையது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இவ் டைனோசர் முட்டை கண்டுபிடிப்பின் மூலம் பறவைகளுக்கும் டைனோசர்களுக்கும் இடையிலான தொடர்பை அறிந்து கொள்ள இயலுவதாக தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சிறந்த டைனோசர் முட்டை கருவாக இதனை ஆய்வாளர் வைத்தியர் பியோனா வைசும் மா தெரிவித்துள்ளார்.

#WorldNews

Exit mobile version