திருகோணமலை – மனையாவெளி பிரதேச மீனவர்களின் வலையில் நேற்றிரவு சுமார் 600 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட ஆனைத்திருக்கை பிடிபட்டதாக மனையாவெளி பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.
சமீபகாலமாக மீன் பிடித்தொழிலில் குறித்த பிரதேச மீனவர்கள் கடுமையான சரிவைக்கண்டுவந்த நிலையிலேயே ஆனைத் திருக்கை மீன் பிடிபட்டுள்ளது.
குறித்த மீனின் பெறுமதி கணிக்கப்பட்டு விற்பனை செய்வதற்கு மீனின் உரிமையாளர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
குறித்த இன ஆனைத் திருக்கை மீன் மேற்படி பிரதேச கடலில் பிடிபடுவது அபூர்வமானதாகும் என பிரதேசத்தில் உள்ள வயதான மீனவர் தமிழ்நாடிக்கு தெரிவித்தார்.
#SrilankaNews