யாழ்., வடமராட்சியில் இன்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.
பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஓட்டோவும், நெல்லியடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மந்திகைக்கும் மாலிசந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் மோதிக்கொண்டதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தனது இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து ஏற்றிவந்தபோதே ஓட்டோவுடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews

