தாய்வானை இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
தாய்வான் வட கிழக்குப் பகுதியிலுள்ள யிலான் மாவட்டத்தில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பூமியின் 67 கிலோ மீற்றர் ஆழத்தில், 6.2 ரிச்டர் அளவில் பதிவான இந்நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் குலுங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வினால் தாய்வான் தலைநகர் தைபே வரை அதிர்வலைகள் உணரப்பட்டதாக, அமெரிக்க நிலநடுக்க ஆய்வியல் மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்திருந்ததுடன், 300 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#world