இரத்தினபுரி மாவட்டம், அயகம – சமருகம பகுதியில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமருகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கும் அவரது அயலவர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி மோதலாக மாறியுள்ளது. இதன் போது பலத்த காயமடைந்த குறித்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேக நபர், சமருகம பகுதியில் வைத்து அயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

