இலங்கையில் ஒரே நாளில் மாபெரும் சுற்றிவளைப்பு: 4,631 பேர் கைது!

25 68f67e9938fc6

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து நேற்று(19) நடாத்திய சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 12 பேரும், சந்தேகத்தின் பேரில் 648 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 230 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 142 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 27 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 15 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3 ஆயிரத்து 557 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version