அஸ்வெசும’ பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கின்மையால் சலுகைகள் கிடைக்கவில்லை – கணக்காய்வு அறிக்கை!

Aswasuma Welfare benifits Board 1200px 2023 07 11 1000x600 1

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள 43,703 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாத காரணத்தினால், அவர்களுக்கான சலுகைகள் கடந்த 2024 ஆம் ஆண்டில் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல், நலன்புரி நன்மைகள் சபை தொடர்பான 2024 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையில் (Audit Report) உள்ளடக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு இல்லாததால், தகுதியுடைய இந்த 43,703 பயனாளிகளுக்குக் குறித்த சலுகைகள் கிடைக்காமல் போக அல்லது இழக்க நேரிடும் என்று கணக்காய்வுச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தக் குறைபாட்டைத் தீர்ப்பதற்காக, நலன்புரி நன்மைகள் சபை 2025 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதி வரையிலும் பொருத்தமான ஒரு பொறிமுறையை நிறுவிச் செயற்படுத்தவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில், வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளுக்குக் கணக்குகளைத் திறக்குமாறு தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை கணக்காய்வு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

கணக்காய்வு அறிக்கையின்படி, பின்வரும் நடவடிக்கைகளைச் சபை உடனடியாக எடுக்க வேண்டும்:

அஸ்வெசும திட்ட விதிகளுக்கு அமைய, தகுதியான நபர்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகள் குறித்த குறைபாட்டைத் தீர்க்க உடனடியாகப் பொருத்தமான பொறிமுறையைச் செயற்படுத்த வேண்டும்.

Exit mobile version