பரிதாபமாக உயிரிழந்த 4 வயது குழந்தை!

child

தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி 4 வயது குழந்தை பரமேஸ்வரன் அருட்சிகா இன்று உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் வவுனியா அண்ணாநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குழந்தை தொட்டிலில் விளையாடும் போதே இவ் அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை இறந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

#SriLankaNews

Exit mobile version