மர்ம நபர்கள் தாக்கியதில் 34 பேர் பலி : நைஜீரியாவில் சம்பவம்!

gun 27

நைஜீரியாவின் வடமேற்கே மர்ம நபர்கள் நடாத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கவுரா நகரில் மடமய் கிராமத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 7 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த தாக்குதலின்போது, சில வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version