images 27
செய்திகள்இலங்கைபிராந்தியம்

305 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் எரிப்பு: பயணிகளுக்கு இலங்கை சுங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

Share

இலங்கைக்கு வரும் பயணிகள் எவரும் சிகரெட்டுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் மீண்டும் ஒருமுறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடந்த நான்கு மாத காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு, சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகள் இன்று (30) முற்பகல் தீயிட்டு அழிக்கப்பட்டன.

மொத்தம் 232,804,000 சிகரெட்டுகள். கெரவலப்பிட்டியவில் உள்ள கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் வைத்து இவை எரிக்கப்பட்டன.

சுங்க ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான வந்தனா புஞ்சிஹேவா மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அழிக்கப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 305 மில்லியன் ரூபா ஆகும்.

இந்தச் சிகரெட்டுகள் உள்நாட்டுச் சந்தைக்குள் சட்டவிரோதமாக நுழைந்திருந்தால், அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 271 மில்லியன் ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைச் சுங்கச் சட்டங்களின்படி, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் எவரும் (சுற்றுலாப் பயணிகள் உட்பட) சிகரெட்டுகளைத் தம்வசம் வைத்திருப்பது அல்லது நாட்டுக்குள் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறி கொண்டு வரப்படும் சிகரெட்டுகள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட பயணிகள் மீது பாரிய அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...