பொலிஸ் மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 30 கிலோ கிராம் ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் தொகை கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தில் (Colombo Central Mail Exchange) வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த 30 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளின் பெறுமதி 150 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

