ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மசூதி மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 29 பேர் சாவடைந்துள்ளனர்.
ஏமன் நாட்டில் மரீப் மாகாணத்தில் எண்ணை கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த மாசி மாதிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திவருகிறார். இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அடிக்கடிபதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மரீப் பிரதேசத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த மசூதியின் மீது ஏவுகணைத் தாக்குல் நடத்தியுள்ளனர். இதில் பெண்கள் குழந்தைகள் என 29 பேர் சாவடைந்துள்ளார்கள்.
சில ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் கொடூர தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் பலர் சாவடைந்துள்ளனர்.
கடந்த ஐப்பசி 25ம் திகதி ஏமன் – சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 264 பேர் சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
#world