MediaFile 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

24 மணிநேரத்தில் தொடர் விபத்துக்கள்: 6 பேர் பரிதாப பலி! உயிரிழந்தவர்களில் 3 பேர் இளைஞர்கள்.

Share

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (03) அதிகாலை தம்புள்ளை – ஹபரணை வீதியின் இநாமலுவ பிரதேசத்தில், சுவிஸ் சந்தி திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் ரொட்டவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேநேரம், நேற்று (02) பிற்பகல் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் நாரம்பிட்டிய சந்தைப் பகுதியில் கொழும்பு திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரே வந்த தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த 19 வயதுடைய கிகுல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, நேற்று பிற்பகல் வாரியபொல – சிலாபம் வீதியின் பண்டாரகொஸ்வத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், 25 வயதுடைய யஹலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை புத்தளம் – திருகோணமலை வீதியின் மாத்தளைச் சந்தி பகுதியில் அநுராதபுரம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி பெண் மீது மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இரத்தினபுரி – பாணந்துறை வீதியின் முணசிங்கபுர பகுதியில் இரத்தினபுரி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எரிபொருள் பவுசருடன் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் ஒருவர் பவுசரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அயகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பெண் என்பதுடன், காயமடைந்த மேலும் நால்வர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பவுசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், நேற்று பிற்பகல் காங்கேசன்துறை – பருத்தித்துறை வீதியின் ஊரணிச் சந்தி பகுதியில் காங்கேசன்துறை நோக்கிச் சென்ற இராணுவ ட்ரக் வண்டி ஒன்றுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த 62 வயதுடைய பெண் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...