யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

25 68f3aa6750683

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: குறித்த இளைஞர் ஒரு கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோப்பாய் பிரதேசத்தில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கும்போது, அந்தத் தகவல்கள் சந்தேக நபர்களுக்குத் தெரிவிக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனால், பொதுமக்கள் காவல்துறையினரை அணுக அச்சப்படும் சூழல் நிலவுவதாகவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரே தகவல்களை வழங்குவது கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் காவல்துறையினருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் கோப்பாய் பிரதேச அமைப்பாளர் விவேக் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Exit mobile version