இந்த இரு நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: வெளியாகியுள்ள அறிவுறுத்தல்
நாட்டு மக்களை மறு அறிவித்தல் வரை இலங்கையர்கள் லெபனான் (Lebanon) மற்றும் சிரியாவிற்கு (Syria) செல்வதை தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இந்த பயண அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இரு நாடுகளிலும் தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், தங்குமிடங்களுக்கு வெளியே நடமாடுவதை தவிர்க்குமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் டமாஸ்கஸில் உள்ள துணைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.