24 66ed0ff0689cb
இந்தியாசெய்திகள்

உதயநிதியின் துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்வி.., கோபத்தில் ரஜினிகாந்த் பேசியது என்ன?

Share

உதயநிதியின் துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்வி.., கோபத்தில் ரஜினிகாந்த் பேசியது என்ன?

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என்று தகவல் பரவி வருவது குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை சில திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் பரவுகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பை முடித்த நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது அவரிடம் வேட்டையன் பட இசைவெளியீட்டு விழாவில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு அது குறித்து தெரியவில்லை” என்றார். மேலும், உதயநிதியின் துணை முதலமைச்சர் பதவி விவகாரத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு, கோபமடைந்த ரஜினிகாந்த், என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

Share
தொடர்புடையது
11 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில்...

10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...