8 3
இந்தியாசெய்திகள்

வரும் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணியா? சீமான் சொன்ன தெளிவான பதில்

Share

வரும் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணியா? சீமான் சொன்ன தெளிவான பதில்

வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சீமான் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “ஃபார்முலா கார் பந்தயம் யாருக்கானதாக இருக்க வேண்டும். நாங்கள் படிக்கின்ற காலத்தில் ஓடுவதற்கு கூட இடம் கிடையாது. கைப்பந்து, இறகுப் பந்து, கால்பந்து ஆகியவற்றை விளையாட கூட எங்களுக்கு வழியில்லை.

இந்த மாதிரியான சிறிய ஊர்களில் இருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக மாற்றுவது என்பது சரி.

ஆனால், பார்முலா 1 பந்தயத்தில் கலந்து கொண்டு கார் ஓட்டுபவர்கள் நம்முடைய ஆட்களா? இந்த விளையாட்டு மேல்தட்டு மக்களுக்கானது.

இரண்டு மருத்துவமனைகள் இருக்கின்ற இடத்தில் இதனை வைத்திருக்கிறீர்கள். போக்குவரத்து நெரிசலை உண்டுபண்ணி இதை நடத்த வேண்டுமா? சாலையில் உள்ள குழியை முதலில் சரிசெய்யுங்கள்” என்றார்.

மேலும் அவரிடம் தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். இப்போதைக்கு 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்துவிட்டேன்” என்றார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...