செய்திகள்
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) வலியுறுத்தியுள்ளார்.
பொது போக்குவரத்து மற்றும் வர்த்தக வாகனங்கள் ஒக்டோபர் மாதத்திற்குள் ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவது தொடர்பான அறிக்கையை நிதியமைச்சு ஓகஸ்ட் மாதத்தில் வெளியிடும் எனவும் எதிர்கால வீதி திட்டம் வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களின் படி, இது தொடர்பான இறக்குமதி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.