tamilni 408 scaled
இந்தியாசெய்திகள்

28 கிலோ தங்கம், வைரம், 800 கிலோ வெள்ளி: தமிழ்நாடு வரும் ஜெயலலிதாவின் நகைகள்!

Share

28 கிலோ தங்கம், வைரம், 800 கிலோ வெள்ளி: தமிழ்நாடு வரும் ஜெயலலிதாவின் நகைகள்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி நகைகள் பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு வருகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு, அவரது சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்குகளில் ஒன்றில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் பெங்களூரில் உள்ள தனியார் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 28 கிலோ தங்கம், வைர நகைகள் மற்றும் 800 கிலோ வெள்ளி நகைகள் பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன.

நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நகைகள் 6 பெட்டிகளில் அடைக்கப்பட்டு, 24 மணி நேர பாதுகாப்புடன் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன.

தமிழக உள்துறை முதன்மை செயலாளர் மார்ச் 6 மற்றும் 7ம் திகதிகளில் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கில், கர்நாடகாவுக்கு வழக்கு கட்டணமாக ரூ.5 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...