உலகம்
ஒரு பொம்மைக்காக தேவையில்லாமல் உயிரைவிட்ட லண்டன் சிறுமி
ஒரு பொம்மைக்காக தேவையில்லாமல் உயிரைவிட்ட லண்டன் சிறுமி
லண்டனில் சிறுமி ஒருத்தி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட வழக்கில், புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன. ஒரு பொம்மைக்காக நடந்த சண்டையில் அவள் உயிரைவிட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு பொம்மைக்காக உயிரைவிட்ட லண்டன் சிறுமி
புதன்கிழமை காலை, பள்ளிக்குச் செல்லும் வழியில், Elianne Andam (15) என்னும் சிறுமி. 17 வயது பையன் ஒருவனால் கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் லண்டனில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
அந்த பையன், Elianneஉடைய தோழி ஒருத்தியின் முன்னாள் காதலனாம். அவன் அந்தச் சிறுமியுடனான தன் காதலை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முயல, அந்த சிறுமி மறுக்க, இதற்கிடையில், அவன் வைத்திருந்த பை ஒன்றில் அந்த சிறுமியின் டெடி பியர் என்னும் கரடி பொம்மை ஒன்று உட்பட சில பொருட்கள் இருப்பதைக் கண்ட Elianne, தன் தோழியின் பொம்மை முதலான பொருட்களை அந்தப் பையனிடமிருந்து பறிக்க முயன்றிருக்கிறாள்.
அந்தப் பையன் முகத்தில் மாஸ்கும், கையில் கையுறைகளும் அணிந்து, ஒரு பயங்கர கத்தியையும் உடன் கொண்டு வந்துள்ளதைப் பார்த்தால், அவன் ஏதோ திட்டத்துடன் வந்துள்ளதுபோல தெரிகிறது.
அவனுக்கும், அவன் முன்னாள் காதலிக்கும் நடுவில் Elianne தலையிட்டு, அந்த பொம்மையைப் பறிக்க முயன்றிருக்கிறாள். பொம்மை முதலான பொருட்கள் இருந்த பையைப் பறித்துக்கொண்டு Elianne ஓட, முன்னாள் காதலியை விட்டு விட்டு, Elianneஐக் கத்தியுடன் துரத்தியிருக்கிறான் அந்தப் பையன்.
Elianneஐக் கத்தியால் தாக்கி, அவள் கீழே விழுந்த பிறகும், மீண்டும் மீண்டும் அவளை பயங்கரமாக குத்திக்கொண்டே இருந்திருக்கிறான் அந்தப் பையன். தேவையில்லாமல், தனக்கு சம்பந்தமில்லாத ஒரு விடயத்தில் தலையிட்டு, வாழவேண்டிய வயதில் உயிரைப் பறிகொடுத்திருக்கிறாள் Elianne.
இவ்வளவு கொடூரச் செயலைச் செய்தும், அவன் 17 வயதுடையவன் என்பதால், அவனது புகைப்படமோ, பெயரோ வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், Elianne கொல்லப்பட்ட இடத்தில் ஏராளமானோர் கூடி, பூங்கொத்துகளை வைத்து, அவளுக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.