ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைமைப் பிரதிநிதிகளுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில்,
“இலங்கை தொடர்பான விசாரணைகளை இனியும் தாமதப்படுத்தாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காக ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற, அத்துமீறல்கள் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமிப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கூட கருத முடியாது.
இந்நிலையில்தான் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் பேரணி நடத்தப்பட்டது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment