செய்திகள்உலகம்

கனடாவில் துப்பாக்கி முனையில் பெண் கடத்தல்!!

21 61bc3f8ee6fba
Share

கனடா- ஒன்ராறியோவின் வசாகா கடற்கரைப்பகுதியில் வீடு புகுந்து கடத்தப்பட்ட பெண் மீது மர்ம நபர்கள் ஏற்கனவே தாக்குதல் நடாத்தியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வசாகா கடற்கரைப்பகுதியில் ஜனவரி மாத ஆரம்பத்தில் 37 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸ் வேடத்தில் வந்த மூன்றுபேரே இவ்வாறு வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை காணாமல்போன பெண் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், தற்போது அவர் மீது முன்னரே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் திகதி கிங் வில்லியம் கிரசண்டில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் வெளியே வாகன நிறுத்துமிடத்தில் இருவர் அவரை தாக்கியதாகவும், வாகனத்தில் இருந்து இழுத்து வெளியே தள்ள முயன்றதாகவும், இதனால் காயம்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஜனவரி 12 ஆம் திகதி இரவு சுமார் 8.30 மணியளவில் வசாகா கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து மூன்று பேர் கொண்ட கும்பலால் குறித்த பெண் கடத்தி செல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை கடத்தப்பட்ட பெண் மீது மர்ம நபர்கள் ஏற்கனவே தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 7
உலகம்செய்திகள்

கனடா பிரதமரை கூப்பிட்டுவைத்து அவமதித்த ட்ரம்ப்: கார்னியின் பதிலடி

தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை அவரது அலுவலகத்தில் சந்தித்தார் கனடா...

20 8
உலகம்செய்திகள்

இந்தியா பின்வாங்கினால் நாங்களும் நிறுத்த தயார்! பாகிஸ்தான் அறிவிப்பு

இந்திய இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் பதற்றத்தை குறைக்க தயாராக இருக்கிறோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது....

16 8
உலகம்செய்திகள்

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! விஜய் பெருமிதம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை...

18 7
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூரில் Jem தலைவர் மசூத் அசார் கொல்லப்பட்டாரா?

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் Jem பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 9 பேர்...