263156560 305994174864450 6241770824106216061 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று ஒதியமலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

Share

இன்றைய தினம் 37 ஆம் ஆண்டு ஒதியமலை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. கடந்த 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட எல்லை கிராமமான ஒதியமலையில் இராணுவத்தினரால் 32 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

அதனை நினைவுகூறும் முகமாக இவ்வாண்டும் சனசமூக நிலைய வளாகத்தில் காணப்படும் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒதியமலைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி வழிபாடுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, ஒட்டுசுட்டான் பிரதேச சபை உறுப்பினர் இ.சத்தியசீலன், ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க தலைவர், படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...