யாழில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக குறித்த பெண்ணின் பி.சி.ஆர். மாதிரிகள் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 68 வயதுடைய கிருஷ்ணபிள்ளை இராசாத்தி என்பவராவார்.