செய்திகள்
பருத்தித்துறையில் மதுபானசாலைகளுக்கு ‘சீல்’!
பருத்தித்துறையில் மதுபானசாலைகளுக்கு ‘சீல்’!
பருத்தித்துறையில் இரண்டு மதுபானசாலைகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அங்கு வேலை செய்த ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த இரு மதுபானசாலைகளும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளன.
கிராமக்கோட்டு சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையும், ஆனைவிழுந்தான்-புனிதநகர் பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையுமே இவ்வாறு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
இந்த இரு கடைகளும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பணிபுரிவோரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வடமராட்சியில் அண்மைக்காலமாக பல்வேறு பதுதிகளில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login